Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

கொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றும் ‘பேய் மாமா’ யோகிபாபு…!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்துள்ள படம் ‘பேய் மாமா.’

இந்தப் படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளார். காதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, ரேகா, கோவை சரளா, ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கம் புலி,  பவர் ஸ்டார் சீனிவாசன்,  அனு மோகன்,  பாஸ்கி,  சாம்ஸ்,  லொள்ளு சபா மனோகர், அபிஷேக், பேபி சவி என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

ஒளிப்பதிவு – M.V.பன்னீர்செல்வம், இசை – ராஜ் ஆர்யன், கலை இயக்கம் -R.ஜனார்த்தனன், படத் தொகுப்பு – பிரீத்தம், வசனம் – சாய் ராஜகோபால், சண்டை இயக்கம் – தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ், நடன இயக்கம் – நோபல், பாடல்கள் -ஷக்தி சிதம்பரம், ஏக்நாத், தயாரிப்பு மேற்பார்வை – ஷங்கர்.ஜி, மக்கள் தொடர்பு  – மௌனம் ரவி – மணவை புவன், தயாரிப்பு – விக்னேஷ் ஏலப்பன், கதை, திரைக்கதை, இயக்கம் – ஷக்தி சிதம்பரம்,

படம் பற்றி இயக்குநர் ஷக்தி சிதம்பரம் பேசும்போது, “வடிவேலுவை இரட்டை வேடங்களில் நடிக்க வெச்சு இந்த படத்தை எடுக்கலாம் என்றுதான் முதலில் யோசித்திருந்தேன். சில, பல காரணங்களால் அது நடக்கவில்லை.

அப்போதுதான் ‘இம்சை அரசன்’ படத்தில் வடிவேலுவுக்கு பதில் யோகிபாபு நடிக்கவிருப்பதாக செய்தி வந்தது. ஆனால், கடைசியில் அதுவும் நடக்கவில்லை. ஆனால், அதைக் கேள்விப்பட்ட பிறகு, நாம் ஏன் யோகிபாபுவை இந்தப் படத்தில் நடிக்க வைக்கக் கூடாதுன்னு தோணுச்சு. அடுத்து, இது பற்றி யோகிபாபுவிடம் பேசினேன்.

இது வடிவேலுவுக்கு பண்ணின கதை’ என்று  சொன்னதும் யோகி முதலில் தயங்கினார். பிறகு ஓகே சொல்லிவிட்டார்.  இந்தப் படத்தில் யோகிபாபு ஒரு பிக் பாக்கெட் அடிக்கிறவர்.  அவரோட வாழ்க்கையில் நடக்கின்ற சம்பவங்கள்தான் படம்.

இதில், கொரோனா மாதிரி ஒரு விஷயமும் இருக்கு. வெளிநாட்டு  மருத்துவக்  கம்பெனியுடன் இணைந்து இங்கேயிருக்கும் சிலர், ஒரு  வைரஸை  மக்களிடையே  பரப்புகிறார்கள்.  அந்த வைரஸுக்கான மருந்தும் அவர்களிடம்தான் இருக்கும். ஆனால், அதை உடனே வெளியிடாமல் நோய் அதிகமாக பரவ வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தலைமுறை, தலைமுறையாக சித்த மருத்துவ சேவையை செய்கின்ற குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கிறார். இதை அறிந்த அந்த வெளிநாட்டு மருத்துவக் குழு அந்த சித்த மருத்துவக் குடும்பத்தையே கொலை செய்து விடுகிறார்கள்.

அவர்களது ஆவி யோகிபாபுவுடன் சேர்ந்து எதிரிகளை பழி வாங்கி எப்படி மக்களை வைரஸிலிருந்து காப்பாற்றினார்கள்  என்பதை முழுக்க, முழுக்க காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறோம்.

இதன் படப்பிடிப்பை 2019 நவம்பர் மாதத்திலேயே முடித்துவிட்டோம். ஆனால் பிப்ரவரி, மார்ச்சில்தான் கொரோனாவே வந்துச்சு.  இப்போ இருக்கிற நிலைமையும் எங்கள் கதைக் களமும் ஒன்றாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. படம் நிச்சயமாக தியேட்டர்களில்தான் வெளியாகும்…”  என்கிறார் ஷக்தி சிதம்பரம்.

- Advertisement -

Read more

Local News