கிருஷ்ணா மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. ஞானவேல்ராஜா சார்பில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மார்ச் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.
ஏஆர் ரகுமான் இசையில் பாடல்கள் உருவாகி உள்ளது. ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராவடி’ என்ற ஐட்டம் பாடல் வெளியாகி உள்ளது.
இந்த பாடலுக்கு ஐட்டம் பாடலுக்கு நடிகை சாயிஷா துள்ளலான நடனம் ஆடியுள்ளார். வெளியான சில மணி நேரங்களிலேயே ஐந்து லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது இப்பாடல்.