Friday, August 16, 2024

பி.சி. ஸ்ரீராம்- சேரனுக்கு விருது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நண்பன் என்கிற அமைப்பு, நண்பன் என்டர்டெய்ன்மென்ட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளது. இதற்கான அறிமுக நிகழ்வில் இயக்குநர் சேரன் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் ஆகியோருக்கு விருது அளிக்கப்பட்டது.

இயக்குனர் சேரன் பேசும்போது, ” நாம் அனைவரும் சேர்ந்து தான் அரசாங்கத்தை உருவாக்கி இருக்கிறோம். நாம் எல்லோரும் சேர்ந்து அளிக்கும் பணத்தில் தான் அரசாங்கம் இயங்குகிறது. நமக்கு வேண்டியவற்றை அரசாங்கம் செய்து தருகிறது. அப்படிச் செய்ய முடியாத சில வேலைகளை நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் குழுமம் செய்கிறது. அதனால் இவர்கள் ஒரு குட்டி அரசாங்கம். நண்பர்கள் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியில் ஒரு அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்டு தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு உதவி செய்து வருவதும், சமூகத்துக்குத் தேவையான உதவி செய்து வருவதை வாழ்த்துவதிலும், வரவேற்பதிலும் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு வழங்கப்பட்டிருக்கும் விருது அடுத்தடுத்து தொடர்ந்து ஓடுவதற்கு அளிக்கப்பட்ட ஊக்க மருந்தாக எடுத்துக் கொள்கிறேன்” என்றார்.

- Advertisement -

Read more

Local News