அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘கனெக்ட்’ திரைப்படம் வரும் 22ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் தற்போது படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
‘99 நிமிடங்கள் ஓடும் இப்படத்துக்கு இடைவேளை கிடையாது’ என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஆனால், ‘இடைவேளை நேரத்தில்தான் திண்பண்டங்கள் விற்பனையாகும். ஆகவே இடைவேளை இல்லாத கனெக்ட் படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்’ என்ற தகவல் வெளியானது.
இதை உறுதிப்படுத்தும்படியாக, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஸ்ரீதர்,, “படத்துக்கு இடைவேளை கிடையாது என்று படக்குழுவினர், திரையரங்க உரிமையாளர்களுக்கு இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை. ஒருவேளை இடைவேளை இல்லை என்பது உறுதியானால், எங்களால் படத்தை திரையிடமுடியாது” என்று தெரிவித்து உள்ளார்.
ஆகவே அறிவிக்கப்பட்டபடி 22ம் தேதி படம் வெளியாகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.