“கல்யாணத்துக்கு அப்புறமும் வாய்ப்புகள் குவிகின்றன!: காஜல் மகிழ்ச்சி!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகு சிறிது இடைவெளி எடுத்து குழந்தையும் பெற்று தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவரது நடிப்பில் கோஸ்டீ படம் திரைக்கு வந்துள்ளது. கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், “திருமண வாழ்க்கை இனிமையாக உள்ளது. இப்போது குடும்ப பொறுப்புகள் வந்துள்ளன. குழந்தையை பராமரிக்க அதிக நேரம் ஒதுக்குகிறேன். நான் திருமணத்துக்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்கள் எனக்கு அளிக்கும் வரவேற்பினால்தான் தொடர்ந்து நடிக்க முடிகிறது. இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். திருமணத்துக்கு பிறகு எனக்கு நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. இது சந்தோஷமாக இருக்கிறது. ஏற்கனவே தமிழில் நான் நிறைய நல்ல படங்களில் நடித்து இருக்கிறேன். தமிழில் நடித்த ‘நான் மகான் அல்ல’ எனக்கு முதல் வெற்றி படமாக அமைந்தது” என்றார்.