Thursday, April 11, 2024

“தமிழ் சினிமாவில் பழைய பார்முலாக்கள் இனிமேல் செல்லாது” – இயக்குநர் பாண்டிராஜ் கருத்து

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இனிமேல் பழைய பார்முலாபடி தமிழ் சினிமாவில் படங்களை உருவாக்க முடியாது” என்று இயக்குநர் பாண்டிராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் உலகத் திரைப்பட விழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இயக்குநர் பாண்டிராஜ் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, “கொரோனா காலத்துக்குப் பிறகு தமிழ் சினிமா ரசிகர்களின் சினிமா பற்றிய பார்வைகள் நிறையவே மாறியிருக்கின்றன. சகாய விலையில் கிடைக்கும் இணையத் தொடர்பின் காரணமாக பல்வேறு இணையத் தளங்களிலும், ஓடிடி தளங்களிலும் நிறைய வெளிநாட்டுப் படங்களைத் தேடித் தேடிப் பார்க்கிறார்கள்.

அவர்கள் வேறு, வேறு திரையனுபவங்களை பெற்று என்னைப் போன்ற இயக்குநர்களைவிடவும் அட்வான்ஸான சிந்தனையில் இருக்கிறார்கள். எனவே இனிமேல் படத்தின் தொடக்கத்தில் பாட்டு, அடுத்து ஒரு சண்டை காட்சி, அப்புறம் பாட்டு என பழைய பார்முலாபடி இனி திரைப்படம் எடுக்க முடியாது. புதிய புதிய கதைகளையும், திரைக்கதையையும் அவர்களுக்குத் தந்தாக வேண்டும். அப்போதுதான் அவர்களை வழக்கம்போல எங்களால் கவர முடியும். நிலைமை இப்போது இப்படி மாறியிருக்கிறது.

பல படங்களில் நடிக்கத் தேர்வாகாமல் ஒதுக்கப்பட்டவர்களைக் கொண்டுதான் சுசீந்திரன் ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தை எடுத்தார். பெரும்பாலானவர்கள் அதில் புதுமுகங்கள்தான். அந்தப் படம் நல்ல வெற்றியைத் தந்தது.

ஒரு ஊரில் 200 உணவகங்கள் இருந்தாலும், சில கடைகளுக்குத்தான் பிராண்ட் நேம் கிடைத்திருக்கிறது. அதுபோல, சில ஈர்ப்புகள் திரைப்படங்களுக்கும் தேவையாக இருக்கின்றன.

அரசியல் கட்சியினர், தொண்டர்கள் பலரும் திரைப்பட போஸ்டர்களைப் பார்க்க மாட்டார்கள். திரைப்பட ரசிகர்கள் அரசியல் போஸ்டர்களைப் பார்க்க மாட்டார்கள். எனவே, இனிமேல் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் படங்களுக்கு தலைப்பிடவும், போஸ்டரை வடிவமைக்கவும் வேண்டும். ‘பசங்க’ படம் எடுக்கும்போதும், ‘மெரினா’ படம் எடுக்கும்போதும் முன்பே தலைப்பு தயாராகவில்லை. படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதுதான் இரு படங்களுக்கும் தலைப்பை வைத்தோம். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இது போன்ற திரைப்பட விழாக்களை நடத்துவதுபோல, தமுஎகச போன்ற அமைப்புகள் சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகளை உருவாக்கலாம்….” என்றார்.

- Advertisement -

Read more

Local News