இந்தியாவில் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஸ்ரேயா கோஷல். இவர் தான் பாடிய ஒரு கில்மா பாடலை நினைத்து தான் வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக அவர் கூறும்போது, அக்னி பாத் படத்தில் இடம்பெற்றுள்ள சிக்னி சமேலி என்ற ஐட்டம் பாடலை சிறு குழந்தைகள் கூட பாடலின் அர்த்தம் என்ன எனத் தெரியாமல் பாடுகிறார்கள். அப்பாடலை பாடிக் கொண்டு நடனமும் ஆடுகிறார்கள். மேலும் இந்தப் பாடல் ரொம்பவும் நன்றாக உள்ளது என என்னிடமே கூறுகிறார்கள்.
மேலும், உங்களுக்காக இந்த பாடலை பாடுவேன் என்று எல்லாம் கூறுகிறார்கள். யாராவது இவ்வாறு கூறினால் எனக்கு சங்கடமாக உள்ளது. 5, 6 வயது குழந்தைகள் இதுபோன்ற பாடல் வரிகளைப் பாடுவது சரியல்ல. இந்தப் பாடலை பாடியதற்காக நான் வெட்கப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார். ஸ்ரேயா கோஷல் இவ்வாறு கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் கூட நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா, புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலை பாடியதற்காக வருத்தப்படுவதாக தெரிவித்தார்.