Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

“விஜய்யுடன் தற்போது தொடர்பில் இல்லை” – நடிகர் ஸ்ரீகாந்தின் வருத்தம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நண்பன்’ படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்திருந்த நடிகர் ஸ்ரீகாந்த், “தற்போது விஜய்யுடன் தொடர்பில் இல்லை” என்று சொல்லியிருக்கிறார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “இயக்குநர் சங்கரிடம், ‘நண்பன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை ‘Zindagi Na Milegi Dobara’ படத்தை கொண்டு எடுக்கலாம் என்று நாங்கள் மூவரும் தெரிவித்தோம். அவர் “அந்த படத்தில் நடித்தவர்கள் ஆகாயத்தில் இருந்து இறங்குவது போல் காட்சி இருக்கும். நீங்களும் செய்வீர்களா?” என்று கேட்டார். அங்கிருந்து நாங்கள் ஓடி வந்து விட்டோம் என்றார்.

தற்போது நடிகர் விஜய்யுடன் தற்போது தொடர்பில் இல்லை. நண்பன் படத்திற்கு முன்பு நானும், அவரும் பழகி வந்தோம். நண்பன் படத்திலும் நானும் அவரும் நண்பராகவே நடித்தோம். என்னிடம் உள்ள மிகப் பெரிய கெட்ட பழக்கம் என்னவென்றால் யாருடனும் Keep in Touch என்பது கிடையாது. அந்த பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அது முடியவில்லை” என்றார்.

- Advertisement -

Read more

Local News