சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆர்யாவின் தயாரிப்பில் உருவான இப்படத்தில் சந்தானம், கௌதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் ஆர்யா, சந்தானம் மற்றும் இயக்குநர் பிரேம் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அவர் அளித்த பேட்டியில், ‘பெருமாள்’ என்கிற கடவுளையோ, ‘கோவிந்தா கோவிந்தா’ பாடலையோ கிண்டல் செய்யும் எண்ணமே எங்களுக்கு இல்லை. கோவிந்தா கோவிந்தா’ பாடலைக் கொண்டு நான் கிண்டல் செய்யவில்லை. நான் பெருமாளின் பக்தன். எனக்கு படத்தின் முதலில் கடவுள் பாடல் வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். பெருமாள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் திருப்பதி கீழ் பகுதியிலிருந்து மேல் பகுதியை நோக்கி நடந்து செல்கிறேன்.இப்போது ஏற்கனவே நிறைய ஹீரோ படங்கள் தயாராகின்றன. நிறைய பேர் என்னை காமெடியன் வேடங்களில் பார்த்துவிட்டார்கள். இனிமேல் அந்த வகையில் நடிக்க வேண்டுமானால் புதிய பாணியில் முயற்சி செய்ய வேண்டும் என எண்ணுகிறேன். நண்பர் சிம்புவுக்காக மீண்டும் அவருடைய படத்தில் காமெடியனாக நடிக்கிறேன்.
படத்தின் மீது ஆர்வத்தை உருவாக்கும் வகையில் சில காட்சிகளைத் தேர்ந்தெடுத்து ட்ரைலரில் வைக்கலாம் எனத் திட்டமிட்டோம். இதன் மூலம் பார்ப்பவர்களுக்கு சில கேள்விகள் தோன்றும். ‘உயிரின் உயிரே’ பாடலின் பயன்பாடு நிச்சயமாக கிண்டலாக இருக்காது. ‘காக்க காக்க’ படத்தை இயக்கிய கௌதம் மேனன் இந்த படத்திலும் ஒரு காரணத்தால் அந்தப் பாடலை பயன்படுத்தியிருக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கும்போது கடந்த படங்களின் ஓட்டத்தைத் தொடரக்கூடாது. புதியதாக ஏதாவது செய்யவேண்டும். இதற்கான திட்டங்களை நான் வகுக்கிறேன். பல படங்களில் இதே மாதிரியான கதாபாத்திரங்களை செய்தேனா இல்லையா என தெரியாது. ஆனால், பழைய கதாபாத்திரங்களை மீண்டும் மீண்டும் கொண்டுவரும் எண்ணம் இல்லை எனத் தெரிவித்தார்.