Thursday, April 11, 2024

மலை உச்சியில் இருந்து  தள்ளி விட்டனர்!:  நடிகை நித்யா ரவீந்திரன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமாக 90ஸ் களில் இருந்த நடிகை நித்யா ரவீந்திரன். இவர் கடந்த 1969ஆம் ஆண்டு வெளியான “குருதிக் களம்” என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதற்கு முன்பே சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் பிரபல ஊடகம் ஓன்று சமீபத்தில் இவரை பேட்டி எடுத்திருந்தது.

நான் நடித்த லாரி படத்தில் நடிக்கும் போது வேக்யூம் ஸ்பேஸ் என்ற கட்சியில் நடித்தேன். வேக்யூம் ஸ்பேஸ் என்றால் கேமெராவை ஓடும் வாகனத்தில் பொருத்தி விடுவார்கள். கேமெரா மேன் போன்றவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு கட்சியில் லாரியில் சென்று கொண்டிருக்கும் போது பிரதாப் என்ற நடிகர் லாரியை ஒட்டிக்கொண்டிருக்கிறார், என்னுடைய அருகே சாந்த குமாரி என்ற நடிகை இருக்கிறார்.

அந்த காட்சியில் நாங்கள் வில்லனிடம் இருந்து தப்பித்து சென்றுகொண்டிருகிறோம், ஏற்காட்டில் கொண்டாய் ஊசி வலையில் சென்று கொண்டிருக்கும் போது பிரதாப் என்னை குதி என்று சொன்னார். நான் என்ன குதி என்கிறாரே என நினைப்பத்தற்குள். தள்ளி விட்டுவிட்டார்.

நான் அங்கே விழுந்து உருண்டு உருண்டு கீழே வரும் போது அங்கே ஒரு கேமெரா வைத்து கட்சிதமாக வந்திருக்கிறது என்றனர். எனக்கு உலகமே சுற்றுகிறது என்னுடைய அப்பா நான் பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்னுடைய பொண்ணை கொன்று விடுவீர்கள் போன்று இருகிறது என்று அலறினார்.அந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியவில்லை” என்றார் நித்யா.

 

- Advertisement -

Read more

Local News