Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ ஆகஸ்ட் 13-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் வெற்றிப் படங்களை தந்து வரும் நடிகை நயன்தாரா நடித்திருக்கும் 65-வது திரைப்படம் ‘நெற்றிக்கண்’.

இந்தப் படத்தை நயன்தாராவின் காதலரான இயக்குநர் விக்னேஷ்  சிவன் தனது Rowdy Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இது இவரது முதல் தயாரிப்பாகும்.

இசை – கிரிஷ், ஒளிப்பதிவு – N.கார்த்திக் கணேஷ், கலை இயக்கம் – S.கமலநாதன், சண்டை இயக்கம் – C.மகேஷ், படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், ஒலியமைப்பு – விஜய் ரத்தினம், உடை வடிவமைப்பு – சைதன்யா, ராவ், தினேஷ் மனோகரன், வசனம் – நவீன் சுந்தரமூர்த்தி, விளம்பர வடிவமைப்பு – கபிலன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா D one, இணை தயாரிப்பு – K.S.மயில்வாகணன், தயாரிப்பு மேற்பார்வை –  V.K.குபேந்திரன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – G முருகபூபதி, M.மணிகண்டன்.

இப்படத்தில் நயன்தாரா பார்வையற்றவராக நடித்துள்ளார். நடிகர் அஜ்மல் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றி பெற்று கவனம் ஈர்த்த அவள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இப்படத்தினை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். சைக்கோ கொலைக்காரனான அஜ்மலை, பார்வையற்ற நயன்தாரா எப்படி எதிர்கொண்டு, அவரை எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் இந்தத் திரைப்படம்.

இது பற்றிய அறிவிப்பை அந்தப் பட நிறுவனம் இன்று டிவீட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ‛‛இருக்கும் கண்கள் மூடினால், மூன்றாவது கண் திறக்கும்! இது நயன்தாராவின் சுட்டெரிக்கும் நெற்றிக்கண்” என்று விளம்பரப்படுத்தி உள்ளனர். இந்த டிவீட் தற்போது மூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இத்திரைப்படம் ஏற்கெனவே திட்டமிட்டபடி டிஸ்னி-ஹாட் ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியாகிறது.

- Advertisement -

Read more

Local News