Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

அப்பாவா.. தாத்தாவா? நீலிமா ஆதங்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வில்லி கதாபாத்திரங்களில் மிரட்டிய நீலிமா 25 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அண்மையில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய கணவரை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை என்னுடைய தாத்தாவா என்று கேட்பதாக கூறி வருத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, “என்னுடைய பதிவுகளை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். நான் ஒரு முறை ஒரு வீடியோவை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தேன். அதில் என்னுடைய வெறுப்பாளர்கள் பதிவிட்ட கமெண்ட்களுக்கு நான் பதில் சொல்லி இருந்தேன்.

இன்னொரு முறை இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல் ஒன்றை பதிவு செய்திருந்தேன். பொதுவாக என்னுடைய கணவர் டை அடித்து அவருடைய வயதை மறைக்க அவர் விரும்பவில்லை;அதை நானும் பெரிதாக விரும்பவில்லை.

குழந்தைகளுக்கு அப்பா, சால்ட் அண்ட் பெப்பர்தான் என்று அறிமுகம் செய்ய வேண்டும் என்று நாங்கள் இருவருமே உறுதியாக இருந்தோம். ஏன் நானே சால்ட் அண்ட் பெப்பர்தான். திரைக்கு தேவைப்படுவதால் கொஞ்சம் கலரிங் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது.

இது எந்த அளவுக்கு நாம் ரியலாக இருக்க முடியும் என்பதை பற்றியதுதான். என்னுடைய கணவரை பார்த்து சிலர் இவர் என்ன உங்களுடைய தாத்தாவா என்று கேட்கிறார்கள். இன்னும் சில சம்யங்களில் அப்பா கூட சென்று இருக்கிறீர்களா போன்ற கமெண்ட்கள் வரும்.

அதற்கு நான் உங்களுடைய புரிதல் அவ்வளவு தான் என்றால் நான் என்ன செய்ய முடியும் என்று மெசேஜ் அனுப்பினேன். இது போன்ற சுய வாழ்க்கை சம்பந்தமான விஷயங்களில் பிரபலங்கள் மட்டுமல்ல அனைவருமே மிக மிக கவனமாக இருக்க வேண்டும். சமூக வலைதளத்தில் ஒரு விஷயத்தை பதிவு செய்யும் ஒரு நபர் அந்த இடத்தில் தன்னை வைத்துப் பார்த்து யோசித்து அந்த கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் அவர்களின் சந்ததியை யோசித்து பார்த்து அந்த பதிவை அவர்கள் பதிவிட வேண்டும் என்று நினைக்கிறேன். நாம் போய் கொண்டிருக்கிற வேகம் வந்து பயமுறுத்துகிறது” என்று பேசினார்

- Advertisement -

Read more

Local News