Thursday, April 11, 2024

வெளிவரக் காத்திருக்கும் நயன்தாராவின் படங்கள்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை நயன்தாராவின் திருமணத்திற்கு பிறகு அவரது நடிப்பில் ‘காட்ஃபாதர்’ திரைப்படம் வெளியானது. தற்போது இரட்டை குழந்தைகளை வளர்க்க வேண்டியிருப்பதால் தொடர்ந்து அவர் படங்களில் நடிப்பாரா.. மாட்டாரா.. என்பது பற்றிய சர்ச்சை எழுந்த நிலையில் அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

‘பிரேமம்’ பட இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், பிரித்விராஜுக்கு ஜோடியாக ‘கோல்டு’ படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நயன்தாரா நடித்துள்ள ‘கனெக்ட்’ படம் நயன்தாராவின் பிறந்த நாளான நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் வினய், சத்யராஜ் ஆகியோர் நயன்தாராவுடன் நடித்துள்ளனர்.

மேலும் நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது.

அதேபோல இயக்குநர் அகமதுவின் இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா ‘இறைவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் நயன்தாராவின் 75-வது படமும் உருவாகி வருகிறது. மேலும் மற்றொரு மலையாள படம் ஒன்றிலும் நிவின் பாலி உடன் நடித்து வருகிறார் நயன்தாரா.

இதையடுத்து நயன்தாரா பிறந்த நாளன்று வேறு சில படங்களில் அப்டேட்டும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News