Thursday, April 11, 2024

நயன்தாரா-விக்னேஷ் சிவன்-வாடகை தாய் விவகாரம் – அரசு விசாரணை உறுதி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் வாடகைத் தாய் சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றினார்களா என்று ஊரக மருத்துவ இயக்குநரகம் மூலம் விளக்கம் பெறப்படும்” என்று தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதிகள் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக நேற்றைக்கு தங்களது சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர்.

இதையொட்டி நடந்த விசாரணையில் இவர்கள் வாடகை தாய் மூலமாக இந்தக் குழந்தைகளைப் பெற்றிருக்கலாம் என்று தெரிய வந்தது.

ஆனால் இ்ந்தியாவில் வாடகை தாய் மூலமாக குழந்தை பெறுவதற்கு சில விதிமுறைகள் உண்டு. தம்பதிகளுக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். தம்பதிகளில் யாரேனும் ஒருவருக்கு குறைபாடு இருக்க வேண்டும். கரு முட்டைகள் உருவாகிய பின்புதான் அது வாடகை தாய்க்கு செலுத்தப்படுதல் வேண்டும் என்ற மருத்துவ ரீதியான நிபந்தனைகள் இதில் உண்டு.

ஆனால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு கடந்த ஜூன் மாதம்தான் திருமணமே நடைபெற்றது என்பதால் இவர்கள் எப்படி இந்த வாடகை தாய் திட்டம் மூலமாகக் குழந்தை பெற முடிந்தது என்று நேற்று இரவு முதலே சமூக வலைத்தளங்களில் வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத் துறை  அமைச்சரான மா.சுப்பிரமணியனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தம்பதியினருக்கு ஞாயிற்றுக்கிழமை இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக மருத்துவ ஊரகப் பணிகள் இயக்குநரகம் தரப்பில் விளக்கம் கேட்கப்படும். கரு முட்டை விவகாரம் தொடர்பாக தற்பொழுதுதான் வழிகாட்டுதல்கள் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. கரு முட்டை 18 வயது முதல் 31 வயதுவரையிலான பெண்களிடமிருந்து மட்டுமே பெறப்பட வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது.

இதனால், இந்த தம்பதிகள் விதிமுறைகளுக்குட்பட்டு கரு முட்டை செலுத்தி குழந்தை பெற்றார்களா என்று விசாரிக்கப்படும்..” என்று தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News