Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

‘நவரசா’ – 9 படங்களில் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் விவரம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியாவின் மிகப் பெரும் திரை ஆளுமைகளான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து உருவாக்கியிருக்கும், ஒன்பது பாகங்களைக் கொண்ட ஆந்தாலாஜி திரைப்படமான நவரசா’, Netflix OTT தளத்தில் 2021 ஆக்ஸ்ட் 6 அன்று வெளியிடப்படுகிறது.

தயாரிப்பாளர் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் கோவிட் 19 நோய் தொற்று பரவலால் முடங்கியிருக்கும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு ஆதரவு தரும் பொருட்டு இத்திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார்.

இத்திரைப்படம் Justickets நிறுவனத்தின் கீழ் AP International மற்றும் Wide Angle Creations எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர்களாக இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையின் முன்னணி திரைத்துறை நிறுவனங்கள் தங்கள் சேவைகளை, திரைத்துறையின் நன்மைக்காக, நல்ல நோக்கத்தின் அடிப்படையில் முழுக்கவே இலவசமாக வழங்கியுள்ளன.

தமிழின் புகழ்மிகு ஆளுமை இயக்குநர் மணிரத்னம் இத்திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார். மணிரத்னமும், இயக்குநர் ஜெயேந்திரா பஞ்சாபகேசனும் இணைந்து, மனித உணர்வுகளின் ஒன்பது ரசங்களின் அடிப்படையில் இப்படத்தினை உருவாக்கியுள்ளார்கள்.

கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய 9 மனித உணர்வுகளை மையமாக கொண்டு ஒன்பது கதைகளின் அடிப்படையில் ஒரு ஆந்தாலஜி திரைப்படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைத்துறையில் தங்களின் தரமான படைப்புகள் வழியே உலக அளவில் சாதனை புரிந்த முன்னணி படைப்பாளிகளான அர்விந்த் சுவாமி, பெஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், ப்ரியதர்ஷன், ரதீந்திரன் பிரசாத், சர்ஜூன் மற்றும் வசந்த் சாய் ஆகிய 9 படைப்பாளிகள் ஒன்றிணைந்து தங்களின் மாறுப்பட்ட பார்வையில் மனித உணர்வுகளின் ஒன்பது ரசத்தை படைப்புகளாக தந்துள்ளனர்.

படத்தின் விபரங்கள் :

1. தலைப்பு – எதிரி (கருணை)

இயக்குநர் – பெஜோய் நம்பியார்

நடிகர்கள் – விஜய் சேதுபதி , பிரகாஷ் ராஜ், ரேவதி

2. தலைப்பு – சம்மர் ஆஃப் 92 ( நகைச்சுவை )

இயக்குநர் – ப்ரியதர்ஷன்

நடிகர்கள் – யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு

3. தலைப்பு – புராஜக்ட் அக்னி (ஆச்சர்யம்)

இயக்குநர் – கார்த்திக் நரேன்

நடிகர்கள் – அர்விந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா

4. தலைப்பு – பாயாசம் ( அருவருப்பு )

இயக்குநர் – வசந்த் S சாய்

நடிகர்கள் – டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன், செல்ஃபி கார்த்திக்

5. தலைப்பு – அமைதி ( அமைதி )

இயக்குநர் – கார்த்திக் சுப்புராஜ்

நடிகர்கள் – சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், மாஸ்டர் தருண்

6. தலைப்பு – ரௌத்திரம் ( கோபம் )

இயக்குநர் – அர்விந்த் சுவாமி

நடிகர்கள் – ரித்விகா ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ, ரமேஷ் திலக், கீதா கைலாசம்

7. தலைப்பு – இண்மை ( பயம் )

இயக்குநர் – ரதீந்திரன் R.பிரசாத்

நடிகர்கள் – சித்தார்த், பார்வதி திருவோத்து

8. தலைப்பு – துணிந்த பின் (தைரியம்)

இயக்குநர் – சர்ஜூன்

நடிகர்கள் – அதர்வா, அஞ்சலி, கிஷோர்

9. தலைப்பு – கிடார் கம்பியின் மேலே நின்று ( காதல் )

இயக்குநர் – கௌதம் வாசுதேவ் மேனன்

நடிகர்கள் – சூர்யா, ப்ரயகா ரோஸ் மார்டின்

தமிழின் உன்னத படைப்பாளிகள் ஒன்றினைந்து உருவாக்கியிருக்கும் இப்படைப்பில் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள், கொடிய நோய்தொற்று பரவலால் முடங்கியிருக்கும் திரைத் துறை தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இப்படத்தில் எந்த ஊதியமும் இல்லாமல், சுய விருப்பத்தின்பேரில் பணிபுரிந்துள்ளார்கள்.

இந்த ‘நவரசா’ ஆந்தாலஜி படைப்பு குறித்து மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இருவரும் பேசும்போது, “ஒரு நல்ல விசயத்துக்காக நிதி திரட்டும் பணிகளை நாங்கள் பல்லாண்டுகளாக செய்து வருகிறோம். ஆனால் இந்த உலக பொது முடக்கம் எங்கள் முகத்தில் அறையும் உண்மையை எடுத்து சொல்லியது. நோய் தொற்றால் ஏற்பட்ட இந்த பொது முடக்கத்தினால் திரைத்துறை தான் மிகப் பெரும் பாதிப்பைப் பெற்றுள்ளது என்கிற உண்மையை உணர்ந்தோம்.

சக திரை தொழிலாளர்களுக்காக, ஏதாவது செய்தே தீரவேண்டும் என்று தோன்றியது. திரைதுறை தொழிலாளர்களுக்கு ஆதரவு தரும் வகையில், உதவும் எண்ணத்தில் பிறந்ததுதான் நவரசா’ ஆந்தாலஜி படைப்பு.

இந்த ஐடியாவை எங்களது சக, முன்னணி படைப்பாளிகள், நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களிடம் எடுத்து சொல்லியபோது, அவர்களின் ஆதரவு பிரமிப்பு தருவதாக இருந்தது. அனைவரும் வெகு உற்காசத்துடன் பணிபுரிய சம்மதித்தார்கள்.

இந்த ஒன்பது படங்களும் மிகப் பெரும் முன்னணி ஆளுமை நிறைந்த குழுக்களுடன், மிக கடினமான சிக்கலான நோய்த் தொற்று காலத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால் நோய் தாக்காதவாறு அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளும் கடைப்பிடிக்கப்பட்டு முழுப் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, இப்போது படம் நிறைவடைந்துள்ளது.

தங்கள் திரைத்துறை நண்பர்களுக்கு, தொழிலாளர்களுக்கு ஆதரவு கரம் தரும் பொருட்டு, முன்னணி கலைஞர்கள் எந்த ஊதியமும் பெறாமல், முழு அர்ப்பணிப்பை தந்து, உருவாக்கியிருக்கும் இந்த உன்னத படைப்பினை உங்கள் பார்வைக்கு வைப்பதில் பெருமை கொள்கிறோம்.

நம் திரைத்துறை கலைஞர்கள் மற்றும் வல்லுநர்களின் திறமையை எடுத்து காட்டும், இந்த அற்புத ஆந்தாலஜி திரைப்படம் 12,000 திரைத்துறை தொழிலாளர்களுக்கு இந்த பொது முடக்கத்தில் ஆதரவை தந்துள்ளது.

திரைத்துறை முழுதிலிருந்தும் கிடைத்து வரும் ஆதரவுகள் Bhoomika Trust மூலம் ஒருங்கிணைத்து வழங்கப்பட்டு வருகிறது. உணர்ச்சிபூர்வமான இந்தத் திரைப்பயணத்தில் எங்களுடன் இணைந்ததற்காக Netflix நிறுவனத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெருமைமிகு படைப்பாளி பரத்பாலா அவர்களின் எண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட, மனித உணர்வுகளின் ஒன்பது ரசங்களை வித்தியாசமான பார்வையில், ஒன்பது கதைகளாக சொல்லும், இப்படத்தின் டீஸர், இன்று ரசிகர்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது…” என்றனர்.

இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 6-ம் தேதியன்று நெட்பிளிஸ்க் வாயிலாக 190 நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது.

- Advertisement -

Read more

Local News