“இளையராஜாவுடன் சண்டைக்கு காரணம்!”: வெளிப்படையாக சொன்ன மிஷ்கின்!

இசையமைப்பாளற் இளையராஜாவுடன் ஏற்பட்ட மோதல் குறித்து இயக்குநர்  மிஷ்கின்  ஒரு பேட்டியில் பேசியிருக்கிறஆர்.

அவர், “ சைக்கோ படத்தில் இடம் பெற்ற உன்ன நினைச்சேன் பாடலில் நான் சொன்ன மாற்றங்கள் இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை. தவிர அந்த பாடலை கபிலன் எழுதக்கூடாது என அவர் சொன்னார். நான் கபிலனை வைத்துத்தான் எழுதினேன். அந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடுவதில் ராஜாவுக்கு உடன்பாடு இல்லை. ஆனால், நான் அவர்தான் பாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இதனால் ராஜா அதிருப்தி அடைந்தார்.

அவர் எனக்கு அப்பா போன்றவர். நான் எப்போதும் அவருக்கு கீழேதான். தமிழ் சினிமாவே அவருக்கு கீழேதான்.

ஆனால், ஒரு இயக்குனராக எனக்கு என்ன வேண்டும் என்பது என் உரிமை. அதற்காக சண்டை போடுவது நியாயம்தான். இளையராஜாவே என்றாலும் அவரும் ஒரு டெக்னீஷன்தான். நான் கேட்பதை அவர் கொடுக்க வேண்டும். சினிமா என்பது ஒரு இயக்குனரின் பார்வை. எந்த பெண்ணை திருமணம் செய்வது என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். என் அப்பா அல்ல. அப்படித்தான் இதுவும்’ என மிஷ்கின் பேசியுள்ளார்.