எனது குறும்படமே எனக்கான விஸ்டிங் கார்டு..! இயக்குனர் பிரதீப்

கோமாளி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். எதார்த்தம் கலந்த கதைக்களத்துடன் ரசிகர்களின் பாராட்டை பெற்ற திரைப்படமாக தற்போது வெளிவந்து வெற்றி நடை போடுகிறது லவ் டுடே.

 இளம் வயது இயக்குனராக அறிமுகமாகி இவர் இயக்கிய இரண்டாவது படத்தில் கதாநாயகனாக நடித்து இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகராக ஜொலிக்கிறார்.

சமீபத்தில் அவர்  யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உங்கள் முதல் படத்தில் பெரிய ஹீரோ,பெரிய தயாரிப்பாளர்,இப்போது கதாநாயகன்  எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.

கல்லூரி படிக்கும் போதே குறும்படம் எடுக்கத் தொடங்கி விட்டேன்.எனது படங்களின் வழியாகவே எனக்கான வாய்ப்பு,அடையாளத்தை கொடுத்தது  நான் எடுத்த குறும்படம். சினிமாவில் எனக்கான விஸ்டிங் கார்டாக அமைந்து விட்டது என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.