பிரபல இசை அமைப்பாளர் இமான், சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய விசயம், இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது.
அதில் அவர், “ நாம் சிறுவயதில் இருந்தே இசை மீது எனக்கு ஆர்வம். பள்ளி நாட்களிலேயே கீ போர்டு கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.
கோலங்கள், கல்கி திருமதி செல்வம் செல்லமே போன்ற சீரியல்களின் டைட்டில் பாடல்களை இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
2001 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் தயாரான “காதலே சுவாசம்” என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தேன்.
படத்திற்கான இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்று மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. ஆனால் அந்தப் படம் இன்று வரை வெளியாகவில்லை.
இதனால் என் மனம் துவண்டு போனது உண்மை. ஆனால் விரைவில், கவலையிலிருந்து விடுபட்டு மீண்டும் அதே உத்வேகத்துடன் பணி புரிய ஆரம்பித்தேன்.
2002ம் ஆண்டு பெரிய வாய்ப்பு வந்தது. விஜய் நடித்த “தமிழன்”திரைப்படம்தான் அது. அப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகி, திரையுலகில் எனக்கோர் இடத்தை அளித்தது” என்று சொல்லி இருக்கிறார் இமான்.