சாவித்திரியை பார்த்து நான் நடிகை ஆனேன்  பி.ஆர் வரலட்சுமி..!

வாழையடி வாழை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பி.ஆர் வரலட்சுமியை அறிமுகப்படுத்தினார் கே.எஸ் கோபாலகிருஷ்ணன். கலை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்துக் கொண்டிருக்கிறார் வரலட்சுமி.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.என்னை எல்லோரும் சாவித்திரி என்று தான் அழைப்பார்கள்.

சிறு வயதிலிருந்து நான் அவரது படத்தை பார்த்து பார்த்து வளந்தவள்.அவர் மீது கொண்ட ஆசையால் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. என தனது சினிமா அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் பி.ஆர் வரலட்சுமி.