Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

பாடல்களை இணையத்தில் NFT முறையில் ஏலத்தில் விற்பனை செய்கிறார் ஜி.வி.பிரகாஷ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வர்த்தகம் தொடர்பான மொபைல் அப்ளிகேஷன்ஸ் வாயிலாக தனது பாடல்களை ஏலத்தில் விடுகிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்

டிஜிட்டல் உலகில் இதுவொரு புது முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல… இந்தியாவிலேயே ஒரு கலைஞர் தனது படைப்புகளை இவ்வாறாக NFT முறையில் ஏலம் விடுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

இதன் மூலமாக முதலில் 6 பாடல்களை மட்டும் ஜி.வி.பிரகாஷ் ஏலம் விடுகிறார். அதன் ஆரம்ப விலையாக 5 எரித்தீயம் என நிர்ணயித்துள்ளார்.

டிஜிட்டல் சொத்துகளுக்கு முக்கியத்துவம் பெருகிவரும் சூழலில் NFT பற்றி புரிந்து கொண்டால்தான் ஜி.வி.பிரகாஷ் செய்யும் முயற்சிகளின் விளைவுகள் புரியும்.

இதன் பின்னணியில் இருப்பது பிளாக் செயின் தொழில் நுட்பமாகும். பிளாக் செயின் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கிரிப்டோகரன்ஸி, NFT போன்றவை செயல்படுகின்றன.

இதன் பரிமாற்றம் பாதுகாப்பானதாகவும், வெளிப்படையாகவும் இருப்பதால் வங்கிகள் போன்ற இடைத்தரக அமைப்புகளின் தேவையை இந்த பிளாக் செயின் தொழில் நுட்பம் தேவையில்லாமல் செய்துவிடுகிறது.

ஆனால், பிட்காயினைவிடவும் இந்த NFT சற்றே வித்தியாசமானது. ஒவ்வொரு NFT-க்கும் ஒரு மதிப்பு உண்டு. ஒரு பிட் காயினைக் கொடுத்து இன்னொரு பிட் காயினை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், ஒரு NFT-யைக் கொடுத்து இன்னொரு NFT-யை வாங்க முடியாது.

இந்த NFT முதன்முதலாக 2017-ம் ஆண்டு கிரிப்டோகிட்டீஸ் என்ற ஆன்லைன் கேமில்தான் அறிமுகமானது. அந்த ஆன்லைன் கேமில் வரும் பூனைகளை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இப்படித்தான் NFT நடைமுறைக்கு வந்தது.

பூனையில் ஆரம்பித்தது தற்போது மெய்நிகர் ரியல் எஸ்டேட் அளவு வளர்ந்து இருக்கிறது.

தற்போது நிஜ உலகில் நிலம் வாங்குவது எல்லாம் பழைய கதையாக மாறிவிடும் அளவுக்கு மெய்நிகர் உலகில் (virtual reality) நிலம் வாங்கும் போக்கு ஆரம்பமாகி இருக்கிறது.

இதைத்தான் இப்போது ஜி.வி.பிரகாஷ் முயற்சித்திருக்கிறார். வெற்றி கிட்டுமா என்பது விரைவில் தெரியும்..!

- Advertisement -

Read more

Local News