Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

பாலிவுட்டில் தடம் பதிக்கும் இசையமைப்பாளர் சி.எஸ்.சாம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இசையமைப்பாளரான சி.எஸ்.சாம், இப்போது தனது இசையால் பாலிவுட்டை அதிர வைத்துள்ளார். இவர் இசையமைத்துள்ள ‘விக்ரம் வேதா’ இந்திப் பதிப்பு பாலிவுட்டில் பெரும் அதிர்வை உண்டாக்கியதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

‘ஓர் இரவு’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சி.எஸ்.சாம். இதைத் தொடர்ந்து ‘விக்ரம் வேதா’ படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ்த் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். அப்படத்தின் பின்னணி இசை, பாடல்களையும் தாண்டி இந்தியாவெங்கும் புகழ் பெற்றது. அப்படத்தின் தீம் இசையும் பட்டிதொட்டியெங்கும் புகழ் பெற்றது.

சாம், தான் இசையமைக்கும் படங்களின் இசையில் தனித்துவம் காட்டி தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களை மயக்கினார். ‘கண்ணம்மா’ என்ற மெலோடி பாடல் தமிழகமெங்கும் அனைவரின் இதயத்தையும் கொள்ளையடித்தது. மெலோடி பாடல்களில் இன்றைய இளைய ஃபேவரைட் இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் சாம் திகழ்கிறார்.

மேலும் இவர் இசையமைத்த கைதி’, ‘அடங்க மறு’, ‘சாணிக்காயிதம்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘சுழல்’ போன்ற படங்களின் தொடர் வெற்றிகளை அடுத்து, சமீபத்தில் வெளியான ’ராக்கெட்ரி’ படமும் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

ராக்கெட்ரி’ வெற்றியை தொடர்ந்து இவரது இசையமைப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தின் இந்திப் பதிப்பின் டிரெய்லர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. படத்தின் இசைக்கு பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் சாமிற்கு பாலிவுட்டிலிருந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து இந்திய மொழிகளிலும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார் சி.எஸ்.சாம்.

- Advertisement -

Read more

Local News