Thursday, April 11, 2024

விமர்சனம்: யாதும் ஊரே யாவரும் கேளிர்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நீண்டகாலமாக வெளியாகாமல் இருந்த நடிகர் விஜய் சேதுபதியின் “யாதும் ஊரே யாவரும்

அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணரோகாந்த் உருவாக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.

மேலும்,  இயக்குநர்கள் மோகன்ராஜா, மகிழ் திருமேனி, கரு.பழனியப்பன், மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா, விவேக், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர்.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

நாடு மறந்து, குடும்பம் துறந்து அகதிகளாக வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் புகும் மக்களின் வலிகளை நாம் உணரும்படி சொல்லியிருக்கும் படம்.

புனிதன் என்ற பெயரில் வலம் வரும் இலங்கை தமிழரான விஜய் சேதுபதி தன்னுடைய இலக்கை அடைய தனக்கென ஒரு குடிமகன் அடையாளம் வேண்டும் என நினைக்கிறார். ஆவணங்கள் படி அவர் “கிருபாநதி”யாக உருவெடுக்கிறார்.

அதேசமயம் காவல்துறை அதிகாரியாக வரும் இயக்குநர் மகிழ்திருமேனி, கிருபாநதியை கொல்ல நினைக்கிறார். இதற்கு காரணம் என்ன,  இலக்கை அடைய ஒரு அகதியாக விஜய் சேதுபதி என்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார்  என்பதே இப்படத்தின் கதை.

விஜய் சேதுபதி தவிர்த்து படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தாலும் அனைருக்கும் உரிய அழுத்தம் கொடுத்து ஈர்க்கிறார் இயக்குநர்.

நிலம், நாடு, அரசியல் போன்றவற்றால் மக்கள் எவ்வாறு பிரிக்கப்படுகிறார்கள்,  அகதிகள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்,  அவர்களின் வலிகள், எதிர்பார்ப்புகள் என்ன என்பதை சொல்கிறது படம்.

காட்சி வழியில் மட்டுமின்று, உரைக்கும் வகையில் சூடான வசனங்களும் உண்டு.  குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சி மிகச்சிறப்பு!

மொத்தத்தில் அகதிகளாக வாழும் மக்களின் வாழ்க்கையின் வலிகளை சொன்ன ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ வரவேற்கத்தக்க படங்களில் ஒன்று..!

- Advertisement -

Read more

Local News