Saturday, July 27, 2024

விமர்சனம்: கருமேகங்கள் கலைகின்றன

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதனாக நடித்திருக்கிறார் பாரதிராஜா. பணம் தான் முக்கியம் என நினைக்கும் கிரிமினல் வழக்கறிஞர் கோமுகனாக நடித்திருக்கிறார் கவுதம் மேனன். ராமநாதனின் மகன் தான் இந்த கோமுகன். பழைய கடிதம் ஒன்று கிடைக்கவே தொலைத்த உறவை தேடிக் கிளம்புகிறார் ராமநாதன்.

அந்த பயணத்தின்போது அப்பாவியான பரோட்டா மாஸ்டர் வீரமணியை(யோகிபாபு) சந்திக்கிறார் ராமநாதன். அவர் தன் உலகமாக இருக்கும் தத்து மகளை தேடிச் செல்வது குறித்து ராமநாதனிடம் கூறுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

இரண்டு ஆண்களின் கடந்த காலம் அவர்களின் நிழல்காலத்தை எப்படி பாதிக்கிறது என்பதை சுவராஸ்யமாக சொல்லியிருக்கிறார் தங்கர் பச்சான். திரைக்கதையில் சில தேவையில்லாத காட்சிகளை திணித்திருப்பதே பிரச்சனை. யோகி பாபுவின் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கும் விதம் அருமை.

யோகி பாபுவின் மகள் சாரா அவரை வீட்டிற்கு திரும்பிச் செல்லவிடாமல் இருப்பதை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது. மேலும் கண்மணியிடம் ராமநாதன் மன்னிப்பு கேட்டு கெஞ்சும்போதும் கண்கள் கலங்குகிறது.

படம் துவங்கி முதல் அரை மணிநேரம் பாரதிராஜா மற்றும் அவரின் குடும்பத்தாரை தான் காட்டுகிறார்கள். வெளிநாட்டில் வாழும் மூத்த மகனும், மகளும் ராமநாதனின் 75வது பிறந்தநாளை யூடியூப் லைவ் வழியாக கொண்டாடுவதை காட்டியிருக்கிறார்கள். அதன் பிறகு அதிதி பாலனை காட்டுகிறார்கள். அவரின் பின்னணி, ஒரு என்கவுன்ட்டர் வழக்கால் அவர் வாழ்க்கை எப்படி கடினமாகிறது என காட்டியிருக்கிறார்கள்.

படத்தில் வந்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். யார் நடிப்பையும் குறை சொல்ல முடியாது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலம்.

- Advertisement -

Read more

Local News