மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலுடன் நடிகை ஷோபனா, நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தொடரும்’ . இது மோகன்லாலின் 360-வது திரைப்படமாகும். குறிப்பிடத்தக்க விஷயமாக, ஷோபனா இப்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள ‘மணிச்சித்திரதாழு’, ‘தென்மாவின் கொம்பத்’, ‘பால கோபாலன் எம்.ஏ’, ‘பவித்ரம்’, ‘மின்னாரம்’ ஆகிய படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. ஷோபனா மற்றும் மோகன்லால் ஆகியோர் ரீல் ஜோடியாக ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
‘துடரும்’ திரைப்படத்தை தருன் மூர்த்தி இயக்கியுள்ளார் மற்றும் படத்தை ரெஞ்சித் தயாரித்துள்ளார். இப்படம் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான ஒரு வாரத்திற்குள் இப்படம் ரூ.100 கோடி வசூலை தாண்டியுள்ளது. இதை கொண்டாடும் விதமாக, படக்குழுவினர் ஒரு சிறப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். மேலும் கடந்த ஒரு மாதத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ மற்றும் ‘துடரும்’ ஆகிய இரு படங்களும் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ‘துடரும்’ திரைப்படம் ‘திரிஷ்யம்’ போலவே சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இப்படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.