மோகன்லாலின் மகன் பிரணவ் தனது திரைப்பயணத்தை தாமதமாக அதாவது முதலில் உதவி இயக்குநராகவும் தொடங்கினாலும், பின்னர் தனது தந்தையைப் போலவே நடிகராக மாறிவிட்டார்.

சமீபத்தில் மோகன்லால் ஒரு பேட்டியில், “என் மகன் இப்போதுதான் தனது பயணத்தை தொடங்கியுள்ளான். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். அவர் சொன்னதற்கு ஏற்ப, பிரணவ் மோகன்லால் நடிப்பதைவிட, தேசாந்திரியைப் போல உலகம் சுற்றுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
அதேநேரம், கடந்த ஆண்டு ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ என்ற படத்தில் நடித்த பிரணவ், அடுத்ததாக மம்முட்டி நடித்த ‘பிரம்மயுகம்’ படத்தை இயக்கிய ராகுல் சதாசிவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானது. தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘பிரம்மயுகம்’ படத்தைப் போலவே இதுவும் திகில் பின்னணி கொண்ட கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகிறது.