சோழர் வரலாறை படமாக்கும் மோகன்ஜி!

மோகன் ஜி இயக்கத்தில், பழைய வண்ணாரப்பேட்டை, திரவுபதி, ருத்ரதாண்டவம், பகாசுரன் ஆகிய பரங்கள் பரவலான வரேவேற்பைப் பெற்றன.

இதைத்தொடர்ந்து தற்போது இவர் புதிய படம் இயக்குவதில் மும்முரம் காட்டி வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிஷி நடிக்கவுள்ளதாக இவர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் மோகன் ஜி அரியலூர், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள கோவிலுக்கு தன் மனைவியுடன் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஏற்கெனவே, ‘அடுத்து, சோழர்கள் குறித்த படத்தை எடுக்க உள்ளேன்’ என மோகன்ஜி அறிவித்து இருந்தார்.

ஆகவே டஇது குடும்ப சுற்றுலாவாக மட்டுமின்றி, தனது படத்துக்கான பணிக்காவும் சென்று இருக்கிறார்’  என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.