“இந்த முறை வேற ஆட்டம்!” : அதிரடியாக அறிவித்த இயக்குனர் மோகன் ஜி

மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரவபதி, ருத்ர தாண்டவம்  பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு பிறகு வந்த பகாசுரன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்த நிலையில் அடுத்து மோகன் ஜி இயக்க உள்ள திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்க உள்ளார். பொதுவாக சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் விஷயங்களை கதைகளமாக் வைத்துதான் மோகன் ஜியின் திரைப்படங்கள் இருக்கும். ஆனால் அடுத்து வருகிற திரைப்படத்தின் கதை முற்றிலும் வேறுவகையானது என கூறப்படுகிறது.

இதுக்குறித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த மோகன் ஜி ”இந்த தடவை வேற மாதிரி களம் வேற மாதிரி ஆட்டம்” என பதிவிட்டுள்ளார்.