மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் குறித்து மாரி செல்வராஜ் சொன்ன கருத்து சர்ச்சையானது. அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குநர் மோகன்ஜி
தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில் ‘தேவர் மகன் தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று. 30 வருடங்கள் ஆகியும் இப்படி ஒரு ஆழமான தென் மாவட்ட கதையை இதுவரை யாரும் சொல்லாததே இந்த திரைப்படத்தின் தனித்தன்மை.. எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் மறைக்க முடியாத காவியம்’ என்று பதிவிட்டுள்ளார்.
மோகன் ஜியின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.