Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

நடிகர் சங்க விவகாரத்தைக் கவனிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவிப்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாளை மறுநாள் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஸ்டாலின்.

அவரை மரியாதை நிமித்தமாக நேற்றைக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், நடிகருமான நாசர் தனது மனைவி கமீலா நாசருடன் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அப்போது நாசர் தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது இருக்கும் சூழலை ஸ்டாலினிடம் தெரிவித்ததாகவும், அதற்கு அவர் “அது பற்றி கவனிக்கிறேன்…” என்று சொல்லியிருப்பதாகவும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் நாசர் இன்று விடுத்துள்ள செய்தியில், “தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக பதவி ஏற்க இருக்கும் தி.மு.க. தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நானும் எனது மனைவியான, தயாரிப்பாளர் கமீலா நாசரும் சந்தித்து வாழ்த்துக் கூறினோம்.

அப்போது, தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தற்போது உள்ள சூழலையும்.. அதனால் பென்ஷன் பெற முடியாமல் இந்தக் கொரோனா காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சக கலைஞர்களின் நிலைமையையும் எடுத்துக் கூறினேன். அதற்கு, “கண்டிப்பாக ஆவன செய்கிறேன்” என்று திரு.ஸ்டாலின் பதிலளித்தார். இதற்காக அவருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், முதல்வராக பதவியேற்க இருக்கும் அவருக்கு, அனைத்து நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தேன்..” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News