மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட அதி கன மழையால் சென்னை வாழ்க்கையை புரட்டி போட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதித்துள்ளது.
வெள்ளம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை, விமான சேவை, பேருந்து சேவை போன்றவைகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், அதில் பாதிக்கப்பட்ட பொது மக்களை மீட்பு படையினர் குழு பத்திரமாக மீட்டு வருகிறது. மீட்கப்பட்டவர்களை முகாமில் தங்க வைத்து சில சமூக ஆர்வலர்கள் உணவுகளையும் வழங்கி வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் சூர்யா-கார்த்தி 10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளனர்.’மிக்ஜாம்’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி செய்துள்ளனர்.