சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் போன பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தாம் தூம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு வந்தார்.
கங்கனா ரனாவத் கடந்த 2014-ல் வெளியான ரிவால்வர் ராணி என்ற படத்தில் பாலிவுட் நடிகர் வீர் தாசுடன் நடித்திருந்தார். படப்பிடிப்பின்போது உதட்டு முத்த காட்சியில் கங்கனா, வீர் தாசை முத்தமிட்டபோது உதட்டை கடித்ததால் அவருக்கு ரத்தம் வந்ததாக ஒரு தகவல் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான ஆலியா பட் மற்றும் ரன்வீர் கபூர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்து இதிலும் சர்ச்சையை கிளப்பினார்.
இந்த நிலையில் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.நடிகர் சேகர் சுமனின் மகன் அத்யாயன் சுமன். இவர் 15 வருடங்களுக்கு முன்பு பாலிவுட்டில் அறிமுகமானார். 2008 ஆம் ஆண்டு நடிகை ராஸ் படத்தின் படப்பிடிப்பில் இருவரும் சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பு காதலாக மாறியது. ஆனால் அடுத்த ஆண்டே பிரிந்தனர்.
அப்போது, அத்யாயன் சுமன் கங்கனா மீது கூறிய குற்றச்சாட்டுகள் பாலிவுட்டையே உலுக்கிவிட்டது.
அவர், “கங்கனா ரனாவத் எனக்கு மந்திரவாதியை வைத்து சூனியம் வைக்க முயன்றார். என்னை வசியப்படுத்த அசுத்த (மாதவிடாய்) இரத்தம் கலந்த உணவை எனக்குத் தெரியாமலேயே ஊட்டினார். மேலும் ஒரு நாள் இரவு 12 மணியளவில் கங்கனா கறுப்பு உடையில் பூஜை செய்து, சில மந்திரங்கள் சொல்லும்படி வற்புறுத்தி அறையில் அடைத்து வைத்தார்” என்றார்.
சமீபத்தில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், நடிகர் அத்யாயன் சுமன் தனது அந்த குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விளக்கம் அளித்து உள்ளார். “அந்த உறவை பற்றி பேசுவதற்கு நான் வருத்தப்படவில்லை. ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதன் மறுபக்கம் மக்களுக்கு தெரியும். நான் ஒரு முறை அதுகுறித்து பேசினேன், மேலும் அது குறித்து விவாதிக்க விரும்பவில்லை” என கூறினார்.
தற்போது அவரது பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.