Thursday, April 11, 2024

வாலி பாடலை குறை கூறிய எம்.ஜி.ஆர்…!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அந்த கால தமிழ் சினிமாவில் 60 களில் சிவாஜி,எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் இந்த மூன்று நடிகர்களின் ஆதிக்கம் தான்  அதிகம்.

இயக்குனர்கள், டெக்னீசியன்கள் என்று ஒவ்வொரு நடிகருக்கும்  தனித்தனியாக குரூப்பாக இருந்த காலம்.ஆனால் பாடல் ஆசிரியர்கள் மட்டும் எல்லா நடிகருக்கும் பொதுவாக இருந்துள்ளனர் அதில் முக்கியமானவர் வாலி.

எம்.ஜி.ஆர். படத்தில் நான் ஆணையிட்டால் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது வாலியை அழைத்த எம்.ஜி.ஆர். உங்கள் பாடலில் பொருள் இல்லை என கூறியிருக்கிறார்.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட தமிழ் பண்டிதரை அழைத்து வாலி பாடலின் குறையை கூற சொல்லியிருக்கிறார். அவரும் எந்த குறையும் இல்லை. எம்.ஜி.ஆருக்காக சொன்னேன் என்றாராம்.

கோபப்பட்ட வாலி வீட்டுக்கு வந்து விட்டார். படத்தின் தயாரிப்பாளரான ஜி.என் வேலுமணி போன் செய்துள்ளார். என் பாட்டில் குறை கூறி விட்டார் சின்னவர் என்று போனை வைத்து விட்டார் வாலி.

ஒரு வாரம் கழித்து  நீங்கள் பாட்டை மாற்ற வேண்டாம் அப்படியே கொடுங்கள். எம்.ஜி.ஆரை அலுவலகத்தில் வந்து பாருங்கள் என்று போன் செய்து கூறியிருக்கின்றனர். அதன் பிறகு ’நான் ஆணையிட்டால் பாடல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News