எக்ஸ்பிரஸ் கவிஞர் என எம்.ஜி.ஆர். அழைத்தது யாரை தெரியுமா?

மலைக்கள்ளன் திரைப்படத்தில் இடம்பெற்ற எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் என்ற பாடலை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ். மாரியம்மன் என்ற திரைப்படத்தில் கவிஞராக அறிமுகமான ராமையாதாஸ், 250 படங்களுக்கு மேல் சுமார் இரண்டாயிரம் பாடல்களை எழுதியுள்ளார்.

புலவர் பட்டம் பெற்று பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த ராமையாதாஸ் சுதந்திரப் போராட்ட பாடல்களும் எழுதியுள்ளார். சுதந்திரம் கிடைத்த பின்னர் தனக்கு வழங்கப்பட்ட தியாகி என்ற பட்டம், பட்டயம் ஆகியவற்றை வேண்டாம் என மறுத்தவர் தஞ்சை ராமையாதாஸ்.

முதலில் அவருக்கு, ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து, எம்ஜிஆர் நடித்த குலேபகாவலி திரைப்படத்தில் சொக்கா போட்ட நவாபு என்ற பாடலும் மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ என்ற பாடலும் தஞ்சை ராமையாதாசை அடையாளம் காட்டியது.

ராமையாதாசின் பாடல் எழுதும் வேகத்தை கண்டு, எக்ஸ்பிரஸ் கவிஞர் என்று அழைத்தார் எம்ஜிஆர்.