சின்னக்கவுண்டர் படத்தில் வழக்கறிஞர், காதல்கோட்டையில் பாதிரியார் என பல படங்களில் கவனிக்கத்தகுந்த குணச்சித்திர வேடங்களில் தோன்றியவர், ரா.சங்கரன்.
இவர் இயக்குநரும் ஆவார். சிவகுமார், ஜெயசித்ரா, கமல் உள்ளிட்டோர் நடித்த தேன்சிந்துதே வானம் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
உன்னிடம் மயங்குகிறேன்.. உள்ளத்தால்.. என்கிற பிரபல பாடல், தேன்சிந்துதே படத்தில் இடம் பெற்றதுதான்.
இவர் இயக்கிய படங்களில் இன்னொன்று, குமரி பெண்ணின் உள்ளத்திலே. 1980 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ராதிகா சரத்குமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ரா.சங்கரன் தனது திரையுலக அனுபவத்தை டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்து வருகிறார்.
அவர், “படம் இயக்குவதற்கு முன்னால், கே.சங்கர் இயக்கத்தில், எம்.ஜி.ஆர். நடித்த பணத்தோட்டம் படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்தேன். படத்தில் எம்.ஜி.ஆருக்கு போஸ்ட் மேன் வேடம்.
அதில் ஒரு வீட்டுக்கு எம்.ஜி.ஆர்., தபால் கொண்டு வந்து கொடுக்கும் சீன்.
போஸ்ட்மேன் டிரஸில் வந்த எம்.ஜி.ஆர்., ‘அம்மா போஸ்ட்..’ என்றபடியே தனது உற்சாக வழக்கத்தில் ஜம்ப் செய்தார்.. அப்போது நான், ‘கட்.. கட்’ என கத்திவிட்டேன்.
கட் சொல்லவது இயக்குநர் பணி. தவிர, எம்.ஜி.ஆர். படத்தில் இயக்குநர்களே கட் சொல்ல பயப்படுவார்கள். இவன் உதவி இயக்குநர்.. இப்படி கட் சொல்லி கத்திவிட்டானே.. என படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் அதிர்ந்துவிட்டனர்…”
# அதன் பிறகு என்ன நடந்தது..?
இந்த சுவாரஸ்ய சஸ்பென்ஸை அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..