திரைத்துறையில் ஆளுமை செலுத்திய எம்.ஜி.ஆர்., வெறும் நடிகர் மட்டுமல்ல.. சிறந்த இயக்குநரும்கூட. தவிர கவிதை ஞானமும், இசை அறிவும் நிரம்ப கொண்டவர். ஆகவே தான் நடிக்கும் படங்களின் பாடல்களை அவரே தேர்ந்தெடுப்பார்.
1960களின் இறுதியில் அடிமைப்பெண் படத்தை உருவாக்க திட்டமிட்டார் எம்.ஜி.ஆர். கே.சங்கர் இயக்கத்தில் கேவி மகாதேவன் இசையமைக்க எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான படம் இது.
இந்தப் படத்தில் அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, ‘தாயில்லாமல் நான் இல்லை..’ பாடல் மிகவும் ரசிக்கப்பட்டது.
அந்த பாடலுக்கு இசையமைக்க முதலில் கேவிஎம் நிறைய மெட்டுக்களை போட்டுக் காட்டியுள்ளார். ஆனால் அது எம்ஜிஆருக்கு பிடிக்கவில்லை. 52 மெட்டுக்கள் போட்டும் 53வது மெட்டில் தான் எம்ஜிஆர் ஓகெ பண்ணியிருக்கிறார். அதன் மூலம் அமைந்ததே இந்த பாடல்.
இது குறித்து பிற்காலத்தில் கே.எம்.வி. கூறும்போது, “அந்த நேரத்தில் எனக்கு டென்சன் ஆனது உண்மை. ஆனால், எம்.ஜி.ஆரின் இசை அறிவை நினைத்து பிரமித்தேன். அவர் கணித்தது போலவே பாடல் பெரும் ஹிட் ஆனது” என்றார்.