Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

புதிய படங்கள்!: மீரா ஜாஸ்மின் மகிழ்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மீரா ஜாஸ்மின் மலையாள திரையுலகில் 2001-ல் அறிமுகமாகி அடுத்த வருடமே மாதவன் ஜோடியாக ரன் படம் மூலம் தமிழுக்கு வந்தார்.தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் பலருடனும் நடித்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய அவர், சுமார் 10 வருடங்கள் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் விமானம் என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்துள்ளார். அடுத்து மாதவனுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் அவர், “நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த எனக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். இனி தொடர்ந்து நடிப்பேன்”  என்று கூறியிருக்கிறார்.

 

- Advertisement -

Read more

Local News