துல்கர் சல்மான் மீனாட்சி சவுத்ரி ஜோடியாக நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‘வாத்தி’. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான இந்தப்படத்தில், சம்யுக்தா, சமுத்திரக்கனி, ராஜேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து வெங்கி அட்லூரி இயக்க இருக்கும் புதிய படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கிறார்.

படத்துக்கு ‘லக்கி பாஸ்கர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஃபார்ச்சூன் 24 நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இதுபற்றிய அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

பான்-இந்தியா படமாக உருவாகும் இதில் துல்கர் சல்மான் ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க இருக்கிறார்.இவர் தமிழில் ‘கொலை’ படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக ‘குண்டூர்காரம்’ படத்தில் நடித்து வருகிறார்.