கோவிலில் தியானம் செய்த சமந்தா!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும், சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். சமீபத்தில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.

அவர் தற்போது ஆன்மீகத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்துகிறார். கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்கிறார். தற்போது லிங்க பைரவி தேவி கோவிலில் அம்மன் முன்னால் உட்கார்ந்து தியானம் செய்யும் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், “வாழ்க்கையில் நம்பிக்கைதான் உயர்வானது. இதற்கு அதீதமான சக்திகள் எதுவும் தேவையில்லை. விசுவாசம்தான் உங்களை அமைதியாக வைத்திருக்கும். நம்பிக்கைதான் உங்கள் குரு. நம்பிக்கைதான் உங்களை மனித நிலைக்கு அப்பாற்பட்ட நிலைக்கு கொண்டு செல்லும்” என்று கூறியுள்ளார். இந்த பதிவு வைரலாகிறது.