2002ல் ரஜினி நடித்து நடித்து வெளியான பாபா திரைப்படம் மீண்டும் வெளியாகிறது. இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றுக்கும், ஒரு நடன இயக்குநர் நடனத்தை அமைத்தார்.
அதன்படி ‘மாயா மாயா’ பாடலுக்கு நடனம் அமைத்தவர் ராகவா லாரன்ஸ்.
இது பற்றி அவர் கூறும்போது, “நடன அசைவுகள் என்பது ஏதோ ஒரு இடத்தில் நமக்கு கிடைக்கும். அது போல, ஆந்திராவுக்கு படப்பிடிப்பு ஒன்றுக்கா சென்றபோது, படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு மரத்தடியில் ரிலாக்ஸாக அமர்ந்திருந்தேன். அப்போது இரு சிறுவர்கள், விளையாட்டாக ஆடினார்கள். அதைப் பார்த்ததும் எனக்குள் பொறி தட்டியது. அவர்களது ஒரு அசைவை வைத்து முழுப் பாடலுக்குமான நடனம் எனக்குத் தோன்றியது” என கூறி இருக்கிறார் லாரன்ஸ்.