Wednesday, April 10, 2024

திரைப்பட விமர்சனம்: மதிமாறன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜிஎஸ் சினிமா தயாரிப்பில் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கி உள்ள படம் மதிமாறன்.

வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம் எஸ் பாஸ்கர், ஆடுகளும் நரேன் உள்ளிட்ட  பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசை அமைத்து உள்ளார்.

படத்தின் நாயகன்  வெங்கட் செங்குட்டுவன் திருநெல்வேலி பகுதியில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார்.  இவர், உடல் வளர்ச்சி இல்லாத, உயரம் குறைவான மனிதர். இதனால் பலரது கேலி கிண்டலுக்கு ஆளாகிறார். கல்லூரியில் படித்து வரும் இவரது அக்கா இவானா கல்லூரி பேராசிரியருடன் ஓடி விடுகிறார், இதனால் அவரது அப்பா எம்.எஸ்.பாஸ்கர்  மற்றும் அம்மா இருவரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இதன்பிறகு தனது அக்காவை தேடி சென்னைக்கு செல்கிறார் வெங்கட். அங்கு தொடர்ச்சியாக பல மர்ம மரணங்கள் நிகழ்கிறது அதை எப்படி வெங்கட் கண்டுபிடிக்கிறார் என்பதே கதை.

நாயகன் வெங்கட் செங்குட்டுவன் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார். படத்தை தனது தோள்களில் சுமந்து செல்கிறார்.

கதாநாயகியான  இவானாவும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும் போஸ்ட் மாஸ்டராக வரும் எம்எஸ் பாஸ்கர், போலீசாக வரும் ஆடுகளம் நரேன் என அனைவரும் நல்ல பெர்பார்மன்சை வழங்கி உள்ளனர்.

கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம்.

உயரம் குறைவாக  இருப்பவர்களை கிண்டல் செய்யும் குணம் பலருக்கு உண்டு.  சம்பந்தப்பட்ட நபரின் மனநிலை எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை உணர்வதில்லை.

இந்த பிரச்சினையை  அடிப்படையாக வைத்து, படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர்.  அதற்காக பாராட்டலாம்.

முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார் இயக்குநர்.

 

 

- Advertisement -

Read more

Local News