Thursday, April 11, 2024

விமர்சனம்  : மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்ன பட்ஜெட்டில் ஒரு பிரம்மாண்டமான திரைப்படம். ஆம்…  பெரிய ஹீரோ – ஹீரோயின்கள் இல்லை… கிராபிக்ஸ் இல்லை.. உலக லெவல் லொகஷன்கள் இல்லை…

ஆனால் அற்புதமான திரைக்கதையால் நம்மை கட்டிப்போட்டு, பிரமிக்க வைக்கிறது, மாருதி நகர் போலீஸ் ஸ்டேசன்.

இதற்கு முதல் பூச்செண்டு பெறுபவர் –  இயக்குநர் தயாள் பத்மனாபன்.

இரவில் பணி முடிந்து வரும் ஜெய்குமார், ஒரு பள்ளி மாணவி கடத்தப்படுவதைப் பார்க்கிறான். அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கிறான். அடுத்த நாள் ஜெய்குமார் இறந்து கிடக்கிறான்.

அவனுடன் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த நண்பர்கள், இந்த மரணத்திற்குப் பழிவாங்க நினைக்கின்றனர். ஆனால், அவர்கள் திட்டமிடுவதோடு சரி, அந்தத் திட்டம் தானாக நடக்கிறது. எப்படி எவரால் எனும் சுவாரசியத்தைக் கடைசி வரை தக்க வைத்துள்ளார் தயாள் பத்மனாபன்.

ஜெய்குமாராக மஹத் ராகவேந்திரா நடித்துள்ளார். அவரது மரணத்தில் இருந்து கதை துவங்கிறது. தவிர, பிளாஷ்பேக்கில்,   தனது குடும்பத்தினர் பற்றி அவர் பேசும் காட்சி.. கலங்க வைத்து இருக்கிறது. இந்த வித்தியாசமான காட்சி – சிந்தனைக்காகவும் இயக்குநரை பாராட்டலாம்.

மஹத்தின் உற்ற நண்பர்களாக வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், யாசர் ஆகியோர் நடித்துள்ளனர். மற்ற மூவரையும் இயக்கும் சக்தியாக அர்ச்சனா எனும் பாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் வரலக்ஷ்மி. சிறப்பான நடிப்பு. ஆனால் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக அவரைக் காட்டி இருக்கலாமோ என தோன்றுகிறது. ஏன் இத்தனை ‘முதிர்ச்சி’… தெரியவில்லை!

இடைவேளை நேரத்தில்தான்  ஏசிபி நெடுஞ்செழியனாக கதைக்குள் வருகிறார்  ஆரவ். ஆகா… சிறப்பான நடிப்பு.

மிடுக்கான தோற்றம், எடுப்பான குரல், கூர் வாள் பார்வை என அசத்துகிறார் ஆரவ்.

கச்சிதமான எடிட்டிங்குக் சொந்தக்காரர்கள்,  ப்ரீத்தி – பாபு. இவர்களைப்போல அசத்தி இருப்பவர், ஒளிப்பதிவாளர் சேகர் சந்திரா.

பெரும்பாலான காட்சிகள் காவல் நிலையத்தையே சுற்றி வந்தாலும், கொஞ்சமும் அலுப்பு தட்டாமல், சுவாரஸ்யம் குறையாமல் இருப்பதற்கு இவரது பங்கு முக்கியமானது.

மணிகாந்த் கத்ரியின் இசை படத்துக்கு பலம்.

கன்னடத்தில் 21 படங்களை உருவாக்கி உள்ள, தயாள் பத்மனாபன்,  தமிழில் கொன்றால் பாவம் படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்தார்.

அதே போன்ற கவனத்தை ஈர்க்கும் சுவாரஸ்யமான படமாக உருவாகி உள்ளது, மாருதி நகர் போலீஸ் ஸ்டேசன்.

ஆஹா ஓ.டி.டி.யில் வெளியாகிறது.

 

 

- Advertisement -

Read more

Local News