Saturday, September 14, 2024

திருமணம் என்னை மாற்றி விட்டது பூர்ணிமா பாக்கியராஜ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை பூர்ணிமா பிஸியான நடிகையாக ஒருகாலத்தில் வலம் வந்தவர்.   1980-ம் ஆண்டு  ஆமலையாளத்தில் ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ படத்தின் வழியாக ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து மலையாளப்படங்கள் பலவற்றில் நடித்தார். 40 க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்த வர், தெலுங்கு,தமிழ், இந்தி, போஜ்புரி ஆகிய மொழிகளிலும் நடித்தார்.

இப்படி பிஸியாக இருந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் பாக்யராஜை கரம் பிடித்தார். அதன் பிறகு நீண்டகாலமாக திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்த அவர், பிறகுதான் சில திரைப்படங்களில் நடித்தார்

ஒரு பேட்டியில் அவரிடம்,” திருமணத்துக்குப் பிறகு நீண்டகாலம் ஏன் நடிக்கவில்லை: என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “சினிமா மட்டும் இருந்த போது அதற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். திருமணம் ஆன பிறகு, கணவர், குழந்தைகள் என குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். திரைப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியான ஒன்றுதான். ஆனால் குடும்பத்தலைவியாக குடும்பத்தினரை கவனிப்பது அதைவிட முக்கியம் அல்லவா” என்றார்.

- Advertisement -

Read more

Local News