நயன்தாரா படத்துக்கு இப்படி ஒரு பெயரா?

‘ப்ளாக்ஷிப்’ யூடியூப் சேனல் புகழ் ட்யூட் விக்கி இயக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நயன்தாரா தவிர, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். சான் ரோல்டன் படத்துக்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் படத்துக்கு ஜி மதன் படத்தொகுப்பு செய்கிறார். இந்நிலையில் இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரை வீடியோவுடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

வீடியோவை பொறுத்தவரை காட்டில் கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதை காட்சிப்படுத்தபடுகிறது. கல்வெட்டு ஒன்றும் காட்டபடுகிறது. பின்பு, சில்லறை நாணயங்கள், ராக்கெட் வடிவத்திலான 500 ரூபாய் தாள், என பரவிக்கிடக்கும் மண்ணில் படத்தின் பெயர் போடப்படுகிறது.