Thursday, April 11, 2024

“மணிரத்னத்தின் மிக முக்கிய வெற்றிப் படம் ‘பொன்னியின் செல்வன்” – கமல்ஹாசனின் நம்பிக்கை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹசன் இருவரும் இணைந்து படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர்.

இவ்விழாவில் கமல்ஹாசன் பேசும்போது, “எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. என்னுடைய மணிரத்னம் பற்றி சொல்ல நிறைய உள்ளது.

ஷோலே மாதிரி ஒரு படம் எடுக்க முடியுமா என்று நினைத்து இருக்கோம். அது மாதிரிதான் இந்த படமும்.

இது ஒரு சிறிய குடும்பம். இதில் யாருக்கும், யார் மீதும் பொறாமைப்பட நேரமில்லை. அதை இளம் வயதில் புரிந்து கொண்டவர்கள்  நானும், ரஜினியும்.

பொன்னியின் செல்வன்’ கதை உரிமையை மக்கள் திலகம்’ எம்ஜிஆர் வாங்கி வைத்திருந்தார். நான் அப்படத்தின் உரிமையை அவரிடம் கேட்டபோது அதனை அவர் என்னிடம் கொடுத்தார். ஆனால், சீக்கிரம் எடுத்துவிடு” என்று கூறினார். அப்போது அது எனக்கு புரியவில்லை. ஆனால், என்னால் எடுக்க முடியவில்லை. அந்தக் கதை என் கையை விட்டு சென்ற வருத்தம் எனக்குள் இருந்தது.

மீண்டும் ஒரு கட்டத்தில் இதைப் படமாக்க முனைந்தபோது, “வந்திய தேவன் கதாப்பாத்திரத்தில் ரஜினியை நடிக்க வை” என சிவாஜி சொன்னார். அதைக் கேட்ட எனக்கு ஷாக்காக இருந்தது. என்னா, அந்த கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்றிருந்தேன். சரி சிவாஜி சாரே ரஜினின்னு சொல்லிட்டாரேன்னு அதை விட்டுவிட்டு.. “அப்ப எனக்கு என்ன கேரக்டர்”ன்னு கேட்டேன்? “நீ அருண்மொழி வர்மன் கேரக்டர் செய்” என்றார். அது அன்று நடக்காமல் போனது.

இன்று ரஜினி செய்ய நினைத்த கேரக்டரில் கார்த்தியும், எனக்கான கேரக்டரில் ஜெயம் ரவியும் நடிக்க கிடைத்துள்ளது. வெற்றியும் வரும்; தோல்வியும் வரும். ஆனால், அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏ.ஆர்.ரஹ்மானின் ஒவ்வொரு பாட்டும் என்னுடைய இதய த் துடிப்பை அதிகரித்தது. நீங்கள் எனக்காக போட்ட பாடலை நான் திரும்ப திரும்ப கேட்டபடியே வந்தேன்.

இந்த பொன்னியின் செல்வன்’ படத்தை ஒன்று மணிரத்னம் எடுப்பார். அல்லது நான் எடுப்பேன் என்று நினைத்தேன். மணிரத்னம் வைராக்கியமாக எடுத்துவிட்டார். நான் முயற்சி செய்தேன், ஆனால் மணிரத்னம் தொடர்ச்சியாக முயன்று வென்றிருக்கிறார்.

மணிரத்னத்தின் வெற்றிப் பட்டியல்களில் மிகக் முக்கிய வெற்றிப் படமாக இது இருக்கும். இதனை நான் மேடை அலங்காரத்துக்காக சொல்லவில்லை” என்று கமல்ஹாசன் பேசினார்.

- Advertisement -

Read more

Local News