Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இங்கிலாந்தில் பாடமாக திரையிடப்பட்ட மம்மூட்டியின் பிரம்மயுகம் திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் மலையாளத்தில் மம்முட்டி நடித்த “பிரம்மயுகம்” என்ற திரைப்படம் வெளியானது. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழும் கதைக்களத்துடன், இந்த படம் ஒரு ஹாரர் திரில்லராக கருப்பு-வெள்ளை முறையில் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் மம்முட்டி 80 வயதான ஒரு மாந்திரீகர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படத்தின் கதை, மம்முட்டியின் தோற்றம் மட்டுமல்லாது, அதன் காட்சிகள் மற்றும் பின்னணி இசையும் ரசிகர்களை ஒரு புதிய உலகத்திற்குள் அழைத்துச் சென்றன. இந்த படத்தை ராகுல் சதாசிவன் இயக்கியிருந்தார்.

இந்நிலையில், தற்போது இங்கிலாந்தில் உள்ள ஒரு கலை மற்றும் பண்பாட்டு பல்கலைக்கழகத்தின் திரைப்பட பயிற்சி பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு “பிரம்மயுகம்” படத்தை பாடமாக திரையிட்டு காட்டியுள்ளனர்.

இந்த படத்தில் உள்ள காட்சிகளின் அமைப்பு மற்றும் பின்னணி இசையை மையமாகக் கொண்டு மாணவர்களுக்கு வகுப்பும் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியானது.

- Advertisement -

Read more

Local News