Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

ரஜினி படத்தில் இருந்து படத்திலிருந்து விலகிய பிரபலம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில்   விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் லால் சலாம். இப்படத்தில் ரஜினி கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார்.

தனுஷ் நடித்த  3 படத்தை 2012 ம் ஆண்டு இயக்கிய, ஐஸ்வர்யா, பிறகு, கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார்.  இதன்பின் 8 வருடங்கள் கழித்து லால் சலாம் படத்தை இயக்குகிறார்.

லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ள இந்தப் படத்தின் பூஜை கடந்த நவம்பர் மாதம் போடப்பட்டது. அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

இந்த நிலையில், திடீரென்று படத்தின் ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சியான தகவலை பதிவிட்டு உள்ளார்.



‘ப்ரீ புரொடக்சஷன் பணிகளின் போது கருத்து வேறுபாட்டின் காரணமாக லால் சலாம் படத்தில் பணிபுரிய எனக்கு விருப்பமில்லை. ஆகையால் இனிமேல் வரும் போஸ்டர்களின் என்னுடைய பெயரை நீக்கி விடுங்கள்’ என்று பதிவிட்டு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் லைக்கா நிறுவனத்தை டேக் செய்து உள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் பூர்ணிமா இருவரும் 30 வருடங்களுக்கு மேலாக நெருங்கிய தோழிகள். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது  அதிர்ச்சியை தந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News