Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

டப்பிங் யூனியன் பில்டிங்கை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் தமிழ்த் திரைப்பட துறையில் இருக்கும் டப்பிங் குரல் கொடுக்கும் கலைஞர்களுக்கு சொந்தமான சங்கக் கட்டிடம் உள்ளது.

இந்தக் கட்டிடம் கடந்த 2011-ம் ஆண்டு 47 லட்ச ரூபாய்க்கு அதாவது 40 லட்சம் இடத்திற்கும், 7 லட்சம் அங்கு இருந்த கட்டிடத்திற்கும் கொடுத்ததாகவும், பின்னர் 75 லட்சம் செலவு செய்து புதிய கட்டிடம் கட்டியதாகவும், மொத்தம் ஒரு கோடியே இறுபத்தி ஐந்து லட்சம் செலவு செய்ததாக அந்த சங்கத்தில் கணக்கு காட்டியுள்ளனர் அப்போதைய சங்க நிர்வாகிகள்.

இதோடு கட்டிடத்திற்கு சென்னை மாநகராட்சியில் பிளான் அப்ரூவல் வாங்குவதற்கு 75 ஆயிரம் செலவு செய்ததாகவும் சங்கத்தின் வரவு, செலவு பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்காக சென்னை மாநகராட்சியில் டப்பிங் யூனியன் நிர்வாகம் எந்தவொரு அனுமதியையும் வாங்கவில்லை என்று மாநகராட்சியில் சிலர் புகார் கொடுத்ததின் பேரில் சென்னை மாநகராட்சி நிர்வாகம், டப்பிங் சங்க நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கி, கட்டிடத்தை பூட்டி சீல் வைக்க இருப்பதாகக் கூறி கால அவகாசம் வழங்கியது.

இந்நிலையில் நடிகர் ராதாரவி தலைமையிலான தற்போதைய டப்பிங் சங்கத்தின் நிர்வாகிகள் மாநகராட்சியின் இந்த நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ராதாரவியின் மனுவை தள்ளுபடி செய்து, “இந்த விஷயத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு எந்தவித தடையும் இல்லை..” என நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ராதாரவி தலைமையிலான நிர்வாகம் அந்தக் கட்டிடத்தில் இருக்கும் பொருட்களை அப்புறப்படுத்த இரண்டு மாத காலம் அவகாசமும் வழங்கியுள்ளது.

- Advertisement -

Read more

Local News