‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:  ஸ்ரீதேவியின் 2-வது மகள் நடிகையாகிறார்!

பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி  ஸ்ரீதேவி-போனி கபூர் தம்பதிக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.  தென்னிந்திய படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வந்தார். தற்போது ஜூனியர் என்.டி.ஆருடன் தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷியும் சினிமாவில் நடிக்க தயாராகி வருவதாகவும் இதற்காக கதைகள் கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வசூல் சாதனை நிகழ்த்திய ‘லவ் டுடே’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க குஷி ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகையாக அவர் அறிமுகமாகிறார்.

இதில் கதாநாயகனாக நடிகர் அமீர்கானின் மூத்த மகன் ஜுனைத் நடிக்கிறார். பிரபல நடிகர், நடிகையின் வாரிசுகள் நடிப்பது படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.