1991ல் கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்து தயாரித்த படம், என் ராசாவின் மனசிலே. இதில் மீனா, வடிவேலு, ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
படம் குறித்து சமீபத்தில் ராஜ்கிரண் பேசும்போது, “இப்படத்தில் நடிக்கும் பொழுது மீனாவிற்கு 15 வயதுதான் இருக்கும். ஆனாலும் பெரிய கதாபாத்திரத்தை ஏற்றி தத்ரூபமாக நடித்திருப்பார்.
பாடல் காட்சி படப்பிடிக்கும் பொழுது, மீனா ஆடை மாற்ற வேண்டியதாக இருந்தது.
அப்பொழுது அங்கு கேரவன் இல்லை. ஆனாலும் தன்னால் படப்பிடிப்பு தாமதமாக கூடாது என, தான் வந்த காரை ரோட்டோரமாக நிறுத்திவிட்டு ஆடையை மாற்றினார். அந்த அளவுக்கு நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் மீனாவுக்கு” என்று நெகிழ்ந்து கூறினார் ராஜ்கிரண்.