Saturday, July 27, 2024

 ’லியோ’ உலக அளவில்  ரூ.600 கோடி சாதனை.!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலை ஈட்டியதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து படம் வெளியாகி 21 நாட்களில் ரூ.600 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் படங்களில் அதிகபட்ச வசூலை குவித்த படம் என்ற பெருமையுடன், தமிழ் சினிமாவில் அதிகபட்ச வசூலை குவித்த 3-ஆவது படம் என்ற அடையாளத்தையும் ‘லியோ’ பெற்றுள்ளது. இதில் ரஜினியின் ‘2.0’ ரூ.700 கோடிக்கும் அதிகமான வசூலுடன் முதலிடத்திலும், ‘ஜெயிலர்’ ரூ.650 கோடியுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News